36வது மரணம் இலங்கையில் பதிவானது!!

கந்தானையை சேர்ந்த 54 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலையில் இருந்து ஐடிஎச் க்கு  மாற்றப்பட்ட போதே  மரணமடைந்துள்ளார் எனவும்  நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த அந்தப் பெண் கொவிட் நிமோனியா நிலைக்கு சென்றமையால் மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் இலங்கையில் கொவிட் -19 தொற்றால் 36அது மரணமாகும் என வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.