கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

 


கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்

 

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதன் மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது.