கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை களனி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 1ம் திகதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட சுவாசிப்பதில் சிரமம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் பாணந்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று(11) இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் மூவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் பதிவான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது.