Tuesday, November 3, 2020

குழந்தையை பிரசவித்த தாய் தப்பியோட்டம்

மட்டு.போதனா வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்த தாய் ஒருவர்  குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் நேற்று(2) அறிவித்துள்ளதாக மட்டு.தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சித்தாண்டி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் குழந்தை பெறுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அந்த குழந்தை எடை குறைவு காரணமாக கண்ணாடி பெட்டியில் வைத்து வைத்தியரின் கண்காணிப்பில் தாயார் குழந்தையை பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்த குழந்தையின் தாயார் காணாமல் போயுள்ளார்.அவர் வீட்டிற்கு சென்று திரும்புவார் என வைத்தியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீண்டும் வைத்தியசாலைக்கு வரவில்லை. இதனையடுத்து குறித்த குழந்தையை விட்டுவிட்டு  தாய் தப்பி ஓடியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளது எடுத்து நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த தாயை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!