மலையகத்தில் கொரோனா கோர தாண்டவம்!!

மஸ்கெலியாவில் 4 மாத குழந்தை உட்பட ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்விடயம் தொடர்பாக மஸ்கெலியா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் தாய் தந்தை மற்றும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 4 பேர் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை மஸ்கெலிய காட்மோர் பகுதியில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய இருவருக்கும் இன்று காலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.