கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் இன்று உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இன்று நால்வர் உயிரிழந்தனர்.அதில் மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் அடங்குகின்றனர்.அவர்களின் விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

1. கொழும்பு 10 மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயதான பெண் மரணம் அடைந்தார்.அவர் நீண்ட காலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

2. கொழும்பு 10 மாளிகாவத்தை சேர்ந்த 69 வயதான பெண்ணும் அடங்குகிறார்.அப்பெண்ணும் நீண்ட காலமாகவே நோய்வாய்பட்டு இருந்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அப்பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

3. வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான நபரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார்.நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்ததுடன் குறுகிய காலத்துக்குள் காய்ச்சல் இருந்துள்ளது.அதனுடன் நிமோனியாவும் ஏற்பட்டுள்ளது. அவரும் வீட்டிலேயே மரணமடைந்துள்ளார்.

4. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த நான்காவது நபர் பெண் ஆவார்.கனேமுல்லையைச் சேர்ந்த 88 வயதான அப்பெண் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்ட நபர்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.அதன் பின்னரே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டது . வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் அங்கொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது இன்று மரணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.