மஸ்கெலியாவில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று!மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில்-பிரக்மோர் பிரிவில் ஒருவர் கொரோனா தொற்றுடன் இன்று(10) அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 வயதுடைய மாணவி ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. கடந்த 5ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெற்றிருந்த நிலையில் இன்று காலை பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.இதில் குறித்த மாணவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சிறுமியின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கடந்த 5ம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் ஹம்பாந்தோட்டையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

கொழும்பிற்கு தொழிலின் நிமித்தம் சென்றவர் அண்மையில் வீட்டுக்கு வந்திருந்தபோது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதுபற்றி மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரை 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.