நவம்பர் 23ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

 


முன்னர் திட்டமிட்டபடி நவம்பர் 23 ஆம் திகதி முதல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


 இருப்பினும், மேல்மாகாண பாடசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

 

 இன்று(19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, நாட்டில் COVID-19 நிலைமை காரணமாக பள்ளிகளுக்கான மூன்றாம் தவணை நவம்பர் 09 முதல் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது