விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை!

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகத்தை நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கவனித்து வந்தார்.அவர் அவ்வப்போது பல மாவட்டங்களுக்கு சென்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தார்.

இந்த சூழ்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் தலைமை தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியாக அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்துள்ளார்.


கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்,பொருளாளராக விஜய்யின் தாயார் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் தெரிவித்திருந்தார். தற்போது ஷோபாவும் எஸ்.ஏ.சி கட்சியிலிருந்தும் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் விஜய் எனறு ஆலோசனை செய்து வருகிறார்.விஜயின் தந்தை எஸ்.ஏ.சி அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் நடிகர் விஜய்.