கொரோனா தொற்றால் மேலும் நால்வர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.

உயிரிழந்தவர்களின் விபரங்கள்,


1. ராஜகிரியவைச் சேர்ந்த 51 வயது ஆண்.இவர் 7.11.2020 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இறந்துள்ளார். இவருக்கு கொரோனாவுடன் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

2. கொழும்பு 10 இல் வசிக்கும் 45 வயதுடைய ஆண். அவர் 23.10.2020 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இறந்துள்ளார்.சுவாசத் தொகுதியில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக இறந்துள்ளார்.

3. கம்பஹாவில் உள்ள உடுகம்பொல பகுதியில் வசிக்கும் 63 வயது பெண்.அவர் 9.11.2020 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இறந்துள்ளார்.மரணத்திற்கு முக்கியக் காரணம் கொவிட்-19 அதனுடன் நிமோனியா காய்ச்சல்.

4. 55-60 வயதுக்கு இடைப்பட்ட அடையாளம் தெரியாத ஆண். பிரேத பரிசோதனைக்கு உடல் 8.11.2020 அன்று பரிசோதனைக்கு சமர்பிக்கப்பட்டது.கொவிட்-19 இனங்காணப்பட்டுள்ளது.