Thursday, November 26, 2020

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறுமா? இன்னும் 10 நாட்களில் தீர்மானம்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் குறிப்பிடப்பட்ட தினத்தில் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் 10 நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இன்று(26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதாவது மேல் மாகாணம் உள்ளிட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ள தேசங்களில் டிசம்பர் முதல் வாரம் அல்லது இன்னும் 10 நாட்களில் பாடசாலைகளை மீள திறப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படாவிட்டால் சாதாரண தரப் பரீட்சையின் திகதிகளில் மாற்றம் செய்ய நேரிடும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!