இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 213 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 


இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரையில் 213 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் மாலனி போத்தாகம தெரிவித்துள்ளார்.

 

இதில் 108 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஏனைய தொற்றாளர்கள் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை 770 குடும்பத்தை சேர்ந்த 3032 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.