வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கு,இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கு அக்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


2006 ஆம் ஆண்டு தண்டனைச் சட்ட திருத்தத்திற்கு அமைய, வெளிநாடுகளில் இலங்கையர்கள் செய்யும் குற்றங்கள் இலங்கையின் சட்டத்திற்கு அமைய தவறெனில் குற்றமிழைத்த இலங்கையர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் யுவதி ஒருவரை இலங்கையர் ஒருவர் கடத்தி வந்துள்ளமை தொடர்பில் இன்று காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.