covid-19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவுதி அரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பமாக உள்ளது.
அங்கு
செல்லவுள்ள 60 பேர் இன்று இரவு
கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் சவுதிக்கு செல்ல உள்ளனர்.அங்கு செல்லவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 180 ஆகும்.முதலாவதாக செல்லும் குழுவை சேர்ந்தோர் சவுதி நாட்டில் ஹோட்டல் துறை மற்றும் சேவைகள
துறையில் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
சமீபத்தில்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமால் ரத்வத்தே மற்றும் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக வேலைவாய்ப்பு முகவர்கள் எதிர்கொண்டிருந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.