தலவாக்கலையில் பெண்ணொருவருக்கு கொரோனா. வர்த்தக நிலையங்களுக்கும் அவர் சென்றுள்ளார்.

தலவாக்கலை மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.32 வயதுடைய பெண் ஒருவருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.


கொழும்பு,வத்தளை பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த குறித்த பெண் கடந்த 16ம் தேதி ஊருக்கு வந்துள்ளார்.கொழும்பிலிருந்து டயகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றிலேயே இவர் வந்துள்ளார்.

இவருடன் வந்து மறுபடியும் கொழும்பு சென்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

கடந்த 4ஆம் திகதி இவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.அதன் முடிவு வெளியான நிலையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதற்கு முன்னர் குறித்த பெண் தலவாக்கலையில் உள்ள வங்கி ஒன்றுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.