மஹர சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற பதற்றமான நிலைமை தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய முழுமையான குற்றவியல் விசாரணையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான விசேட குழுவினர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.