Saturday, November 7, 2020

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் எந்த அறிகுறியும் தென்படாதவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் விட தீர்மானம்

கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எந்தவொரு கொரோனா அறிகுறியும் இல்லாதவர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

5355 கொரோனா தொற்றாளர்கள் நாடளாவிய ரீதியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு, ஆய்வக வசதிகள் மற்றும் வைத்தியசாலை இடப்பற்றாக்குறை என்பவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர் ஒருவர் எந்த ஒரு கொரோனா அறிகுறியும இல்லாத நிலையில் 14 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளாமல் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!