சீன நிறுவனமொன்று பிசிஆர் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது.

முல்லேரியா வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரம் ஒன்றை சீனாவின் BGI Genomics என்ற நிறுவனம் அன்பளிப்பு செய்துள்ளதென, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.


குறித்த வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு வரும் பிசிஆர் இயந்திரம் செயலிழந்தால், இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்த முடியும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஏற்கனவே முல்லேரியா வைத்தியசாலைக்கு, சீனாவால் பிசிஆர் இயந்திரமொன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.