சிலாபம்-வெல்ல பிரதேசத்தின் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இன்று பகலில் இருந்து தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட வடக்கு,தெற்கு கடற்கரை பிரிவு,குருசபாடு,ஏகொடவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவை பணிப்பாளர், வைத்தியர் தினுசா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.