Thursday, November 26, 2020

களுத்துறை மற்றும் பேருவளை சுகாதார பிரிவில் சகல பொது சுகாதார பரிசோதகர்களும் கடமையில் இருந்து விலகியுள்ளனர்.

களுத்துறை மற்றும் பேருவளை சுகாதார பிரிவுக்கு இணைவாக கடமையாற்றும் சகல பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் மீண்டும் பேருவளை பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் கடமையாற்றி வந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக களுத்துறை மற்றும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!