வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்திகள் தானாக மறையும் ஆப்ஷன் அறிமுகம்



குறுஞ்செய்திகளை காணாமல் போகச் செய்வது (disappearing messages) என்ற புதிய ஆப்ஷனை வாட்ஸ் அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து அதனை அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரது மொபைலில் மெசேஜ்கள் தானாக அழிந்து விடும்.

இது சேட்டுகளை(chats) தனிப்பட்ட முறையில் பாதுகாக்க உதவும் என பேஸ்புக்கின் வாட்ஸ் அப் செயலி தெரிவிக்கிறது.

எனினும் குறுஞ்செய்திகளை பெறுபவர் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அல்லது தங்களுக்கு வேண்டிய செய்திகள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீங்கள் செய்த சேட்டுகள் நிரந்தரமாக உங்கள் போனில் இருக்காதது மனநிம்மதியை தரும். நீங்கள் அழிக்க மறந்த மெசேஜ்கள் இதனால் ஏழு நாட்களுக்குப் பிறகு தானாக அழிந்து விடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.