வெள்ளை சீனியின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வெள்ளை சீனி ஒரு கிலோவின் மொத்த விற்பனை விலை 80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதியிடப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றின் சில்லரை விற்பனை விலை 85 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.