சுகாதார நிலைகள் சீராகும் வரை புறக்கோட்டை மெனிங் சந்தை திறக்கப்படமாட்டாது.

சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்று சுகாதார நிலை சீராகும் வரை புறக்கோட்டை மெனிங் சந்தை திறக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


 இதேவேளை மெனிங் சந்தை இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் தமது உற்பத்திப் பொருட்களுடன் நூற்றுக்கணக்கான லொரிகளில் வருகை தந்தவர்கள் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.