நாடு முழுவதையும் முடக்கத்தேவையில்லை; 6 பல்கலைக்கழக பேராசிரியர்கள் இராணுவத் தளபதிக்கு கடிதம்


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடுமுழுவதையும் முடக்கத் தேவையில்லை எனத் தெரிவித்து 6 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தப் பேராசிரியர்கள், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளனர். 

களனி, ருகுனு, பேராதெனிய, ரஜரட்ட, கொழும்பு, ஜயவர்தனபுர ஆகியப் பல்கலைகலகங்களைச் சேர்ந்த பேராசியர் குழு ஒன்றே இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இக்கடிதத்தின் பிரதி, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச்.முனசிங்க, சுகாதார சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.