கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (28) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து வந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி
பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 18 வயதுடைய யுவதிகள் இருவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.கொழும்பு தெமட்டகொடை பகுதியிலிருந்து கடந்த 16 ஆம் திகதி இவர்கள்
ஊருக்கு வந்துள்ளனர்.கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக
மாதிரிகள் பெறப்பட்டன.முடிவுகள் இன்று காலை வெளியாகிய நிலையில்
அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன்
கொட்டகலை வூட்டன் தோட்டத்தில் 36 வயதுடைய ஆண் ஒருவருக்கும் வைரஸ்
தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இவர் கொழும்பு கிராண்ட்பாஸ்
பகுதியில் இருந்து வந்துள்ளார்.
அதேபோல
கொழும்பு கிரிபத்கொட பகுதியிலிருந்து தலவாக்கலை கிரேட்வெஸ்டர்ன் தோட்டத்தின் லூசா பிரிவிலுள்ள வீட்டுக்கு
வந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.