முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

கொரோனா நோய்த்தொற்று பரவலை எதிர்த்துப்போராட அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அமெரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அதுவரை தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு பொது தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க மக்கள் அனைவரும் முக கவசங்களை அணிந்து கொள்வது மிகவும் உதவும் என்றும் அதனால் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.