Saturday, November 7, 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் அமோக வெற்றி!

அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றியீட்டியுள்ளார்.


கடந்த மூன்றாம் திகதி நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணுவதில் பல்வேறு குழப்ப நிலைகள் நீடித்து வந்தது.இந்த நிலையில் தேர்தலில் பைடன் வெற்றியீட்டி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 தேர்தல் கல்லூரிகள் அல்லது அதற்குமேல் வெல்லும் வேட்பாளர் அந்நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அந்த வகையில் இன்றைய தினம் இறுதியாக கிடைக்கப்பெற்ற பென்சில்வேனியா மாநில முடிவுகளுடன் பைடனுக்கு 273 தேர்தல் கல்லூரிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்னும் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் பைடன் போதியளவு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் தெரிவாகியுள்ளார்.

மேலும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி கமலா என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ் முதலாவது கறுப்பின மற்றும் தென் ஆசியாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தேர்தலில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!