வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளது!!

இந்நாட்டில் கொரோனா பரவலால் ஏற்படும் மரணங்கள் தொடர்வதனால், நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவானமை ஆபத்தான நிலைமை என வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவானது, இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு வீதம் தொடர்பில் எதிர்காலத்தில் அதிக அளவில் நேரிட வேண்டி ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் இப்போது வீடுகளுக்குள் வந்துள்ளதாகவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.