Wednesday, November 18, 2020

தீபாவளி பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி!

 


கொழும்பிலிருந்து பொகவந்தலாவை பகுதிக்கு தீபாவளி பண்டிகைக்காக வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

நேற்றைய தினம் குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலாவை சுகாதார காரியாலயத்திற்கு சென்று பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று கிடைத்த மருத்துவ அறிக்கையிலேயே அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

 

குறித்த இளைஞர் கொழும்பு வெள்ளவத்தையில் பொலித்தீன் கடை ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார்.கடந்த 10 ஆம் திகதி கொழும்பிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில் ஹட்டன் சென்று,ஹட்டனில் இருந்து தனியார் பஸ் ஒன்றில் பொகவந்தலாவை சென்று அங்கிருந்து ஒரு முச்சக்கர வண்டியில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

பொகவந்தலாவை மேற்பிரிவைச் சேர்ந்த இவர் தீபாவளி பண்டிகையை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடியுள்ளமை தெரியவந்துள்ளது. அவருடன் தொடர்பை பேணியவர்களின் தகவல்களை பெற்று அவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!