Wednesday, November 25, 2020

புதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்!

 


மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியால் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலானவை வீட்டிலேயே சம்பவித்துள்ளதென 
தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதில் அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களை கொண்டவர்களுக்கு புதிய நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உடையவர்கள் தமக்கு ஏதாவது புதிய நோய் அறிகுறிகள் காணப்பட்டால் விரைவாக சிகிச்சைக்கு செல்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல்,இருமல்,சளி,தொண்டை வலி,மூச்சு எடுப்பதில் சிரமம்,உடல் பலவீனம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டாலும் சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1999 என்ற இலக்கத்திற்கு அழைத்து ஆலோசனை பெறுவது சிறந்தது என்றும் நோயின் தன்மை அதிகரிக்கும் வரையில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!