எல்ஜின் மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

 


 லிந்துலை லிப்பகலை தோட்டத்தில் 22 வயதான ஆண் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் தெமட்டகொட பிரதேசத்தில் பணியாற்றியுள்ளார்.அவரின் மனைவிக்கு நேற்று முன்தினம் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன்,அவரது மனைவி மாத்தறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 

இதேவேளை கொழும்பில் பணி செய்துவிட்டு தீபாவளி பண்டிகைக்கு அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்டத்திற்கு வந்த 52 வயதுடைய ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் பிசிஆர் பரிசோதனையின்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இவரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதனைத் தொடர்ந்து பெரியநாகவத்தை தோட்டம் முழுவதும் லிந்துலை பொது சுகாதார அதிகாரிகள் அக்கரப்பத்தனை பிரதேச சபையும் அக்கரப்பத்தனை போலீசாரும் இணைந்து தொற்று நீக்கி தெளித்துள்ளனர்.மேலும் இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.