நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 502 தொற்றாளர்களில் 262 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள்.நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 502 தொற்றாளர்களில் 262 பேர் கொழும்பு நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் வெள்ளவத்தையில் 23 தொற்றாளர்களும் கிருலப்பனையில் 28 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்,புறக்கோட்டையில் இருந்து ஒருவரும் கொம்பனித் தெருவில் இருந்து 31 பேரும் கொள்ளுப்பிட்டியில் இருந்து 6 பேரும் மருதானை 15 பேரும் அளுத்கடை 42 பேரும் ப்ளூமெண்டல் 19 பேரும் கிராண்ட்பாஸ் 39 பேரும் மட்டக்குளிய 42 பேரும் தெஹிவளை 5 பேரும் தெமட்டகொடை 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.