கோப் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை முதல் முறையாக ஒன்லைன் முறையில் கூட உள்ளது.
களனி கங்கை நீர் மாசடைவது பற்றி பேசுவதற்காக அதிகாரிகளை இணையத்தின் ஊடாக தொடர்புபடுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய நேரடி வருகைகளை குறைத்து,குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கில் ஒன்லைன் முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.