கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உடல்நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை காலிமுகத்திடலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட போது மயங்கி விழுந்ததாகவும்,இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் உயிரிழந்துளளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் மிக நீண்ட நாட்களாக இதய நோய் தொடர்பில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.