அக்கரைப்பற்றில் 10 பேருக்கு கொரோனா தொற்று!

அக்கரைப்பற்றில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் தெரிவித்துள்ளார்.


நேற்று முன்தினம் அக்கரைப்பற்று சந்தையில் உள்ள 20 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து,அதில் 10 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்துக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அக்கரைப்பற்று நகரை முடக்கம் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டொக்டர் பறூஸா நக்பர் தெரிவித்துள்ளார்.