Tuesday, November 10, 2020

தாத்தாவாகியுள்ள நடிகர் விக்ரம்!

நடிகர் விக்ரமின் மகளுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாமசுந்தரி தம்பதிகளின் மகள் வழி பேரன் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன் மகன் ரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் சென்னையில் நடைபெற்றது.கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

இதனிடையில் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இதன் மூலம் நடிகர் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் விக்ரமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நிச்சயமாக ஜாலியான தாத்தாவாக இருப்பீர்கள். குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!