தடையில்லா மின்சாரத்துக்கு உத்தரவாதம்!!2021 ஆம் ஆண்டிற்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர் 2021-2022 ஆண்டுகளில் தடையில்லாத மின்சாரத்துக்கு உத்தரவாதம் அளிக்க லக்விஜய மற்றும் கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையங்கள் வலுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2021-2023 க்கு இடையில் தேசிய மின் கட்டமைப்பில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 குள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.