Saturday, November 7, 2020

சுகாதார வழிகாட்டல் கோவையொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(9) தளர்த்தப்பட்டாலும் மூன்றாவது கொரோனா அலை உருவாகும் சூழலில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.


ஆடைத் தொழில் துறை, போக்குவரத்து,வாடகை போக்குவரத்து சேவை,வருமானம் ஈட்டும் சேவைகள்,அரசு அலுவலகங்கள்,தனியார் சேவைகள்,பல்பொருள் அங்காடிகள்,கடைகள்,நிதி நிறுவனங்கள்,வங்கிகள்,ஆடை விற்பனை நிலையங்கள்,விவசாயம், பொருளாதார மத்திய நிலையங்கள், பேக்கரி,வீதியோர விற்பனை கூடங்கள்,நடமாடும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

1.5 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றும் விதத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் ஏற்பாடுகளை செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெறும் இடங்கள்,பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்,உயர்கல்வி நிறுவனங்கள்,தனியார் வகுப்புக்கள்,உள்ளக நிகழ்வுகள் திறந்தவெளி நிகழ்வுகள் ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைவேளை திரையரங்குகள், சிறுவர் பூங்காக்கள்,மிருகக்காட்சி சாலைகள்,விழாக்கள்,இசை நிகழ்ச்சிகள்,கரையோர விருந்துகள்,நீ தடாகங்கள்,சூதாட்ட நிலையங்கள்,இரவு நேர களியாட்ட விடுதிகள்,மசாஜ் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!