சிறைச்சாலைகளில் பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்.

சிறைச்சாலைகளில் பரவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நீதியமைச்சரின் கோரிக்கைக்கமைய  சட்டமா அதிபரால்,பதில் பொலிஸ் மா அதிபருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


இதற்கமைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவால் திருத்தம் செய்யப்பட்ட சில ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிணை வழங்கக் கூடிய கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபரால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷர ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.