திருமணம்
மேற்கொள்ள இருப்பவர்கள் அனுமதி பெறுவதுடன், அனுமதி பெறப்பட்ட 25 நபர்களை மாத்திரம் கொண்டு தொற்று ஏற்படாதவாறு திருமணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருமண
நிகழ்வின் போது கடைபிடிக்க வேண்டிய
முக்கிய நிபந்தனைகள்.
• 25 க்கும்
குறைவான எண்ணிக்கையாளர்கள் அழைக்கப்பட வேண்டும்.
• நிகழ்வின்
போது கைகளை கழுவுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும்.
• வருகைதரும்
ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
• ஆசனங்கள்
குறைந்தது மூன்று அடி இடைவெளியில் போடப்பட்டு
இருத்தல் வேண்டும்.
• நிகழ்வினை
விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்.
• காய்ச்சல்,தடிமல்,இருமல் உள்ளவர்கள் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
• விண்ணப்ப
படிவம் பூர்த்தி செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட பின்னரே திருமணம் இடம்பெறவேண்டும்.
மேற்கூறிய
நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள்
வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.