Monday, November 30, 2020

கண்டி-திகன பிரதேசத்தில் நிலநடுக்கம்.



கண்டி-திகன பிரதேசத்தில் நேற்று இரவு சிறியளவு நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பள்ளேகல மற்றும் மஹகந்தராவ நில அதிர்வு மத்திய நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கமானது திகன, அம்பகோட்டே மற்றும் அளுத்வத்த ஆகிய பிரதேசங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இன்று வரையான மூன்று மாதங்களுக்குள் ஐந்து தடவைகள் சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் கண்டி,கருதெனிய,ரஜவெல,தலாத்துஓயாவுக்கு அண்மித்த பாரகம,அநுரகம ஆகிய இடங்களில் இது
உணரப்பட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!