சூர்யா-ஜோதிகா இணைந்து நடிக்கும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு விரைவில்...

நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகா இருவரும் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'.


இருவரின் திருமணத்திற்கு முன்பு கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்து வரும் சூர்யா அவருடன் இணைந்து நடிக்கவில்லை.இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அண்மையில் காணொளி வாயிலாக பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய சூர்யா அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா சமீம், சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிக்க உள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.