இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாக உள்ளன.
இந்த நிலையம் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்கும்.இது கெரவலப்பிட்டியவிலுள்ள லக்தனவி மின் உற்பத்தி நிலையத்தில் அமைய உள்ளது.
இதுதொடர்பான யோசனையை மின்வலு எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்திருந்தார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி ஆகும் தருணத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பமாகும் என அவர் கூறியுள்ளார்.