Wednesday, November 11, 2020

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதற்கமைய தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் சில கட்டணங்களை 2020 மார்ச் முதல் அமுலாகும் வகையில் அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

covid-19 தொற்றால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பேருந்து போக்குவரத்தாளர்களுக்கான மானியம் வழங்கல்.

covid-19 தொற்றால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பேருந்து போக்குவரத்தாளர்களிடமிருந்து அறவிடப்படும் கீழ்வரும் கட்டணங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

•அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான கட்டணம்

•தாமதக் கட்டணம்

•விலை மனுக்கோரல் கட்டணம்

•லொக் பத்திரக் கட்டணம்

•உள்நுழைதல் கட்டணம்

•அதிவேக நெடுஞ்சாலையின் தற்காலிக அனுமதி பத்திர கட்டணம்

எவ்வாறாயினும் இத்தொற்று மீண்டும் பரவுவதால் பேருந்து போக்குவரத்தாளர்கள் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.பயணிகள் போக்குவரத்து சேவையை தரமாகவும்,வினைத்திறனுடனும்
 வழங்கும் முகமாக அவர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.


 அதற்கமைய போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்திற் கொண்டு இவ் வருட இறுதி வரைக்கும் தொடர்ந்து மானியங்களை பேருந்து போக்குவரத்தாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!