Tuesday, November 17, 2020

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை நடைமுறை!!

2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகமும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் எட்டப்பட்டுள்ள தீர்மானம்.


'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' தேசியக் கொள்கை பிரகடனத்தின் 10 அம்ச கொள்கைகளில் ஒன்றான "மிடுக்கான தேசம்" (ஸ்மார்ட் நேக்ஷன்) என்னும் நோக்கத்தை அடைவதற்காக ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகம் மற்றும் அதற்குத் தேவையான வசதியளித்தல்களுக்கான மூலோபாயம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுவதுடன், அது தேசிய நிகழ்ச்சித்திட்டமாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் இணைந்து இலங்கைக்கான ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை தயாரித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.அதற்கமைய கீழ்காணும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• குறித்த நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிக்கும் குழுவால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இலங்கைக்கான ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டத்திற்கான அங்கீகாரம்

• இலங்கைக்கான ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நிறுவுவதற்கு தேவையான வழிகாட்டல்களுக்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்தல்.

• இலங்கைக்கான ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவக் சட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஒப்படைத்தல்.

• இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

• இலங்கைக்கான ஒன்றிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகமும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளுக்காக 1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல்.

• குறித்த கருத்திட்டத்தை 2022.12.31 இல் பூர்த்தி செய்தல்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!