Monday, November 9, 2020

உலக சுகாதார அமைப்பிடம் இருந்து இலங்கைக்கு ஒரு லட்சம் உடனடி என்ட்டிபயோட்டிக் சோதனை கருவிகள்

கொவிட் தொற்றாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் 'உடனடி என்டிபயோடிக் சோதனைக் கருவிகள்' ஒரு இலட்சம் உலக சுகாதார அமைப்பினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி,விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.


குறித்த கருவிகள் சுகாதார அமைச்சின் மருந்து வினியோக பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த கருவிகள் தொகையை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கும் நிகழ்வு இன்று மாலை உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ஒருவரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Rapid Antigen Test என்ற முறை, கொரோனா வைரஸை இனங்காணும் புதிய முறையாகும்

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!