இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸினால் பலி!

கொரோனா வைரஸினால் இலங்கையில் மேலும் இரண்டு மரணங்கள் இன்று(12) பதிவாகியுள்ளன.

இந்த இரண்டு மரணங்களும் அங்கொடை முல்லேரியா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளன. 

இதன்படி கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஆண் நபர் இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு சரீரத்தில் மேலும் பல நோய்கள் இருந்திருப்பது அறியப்பட்டுள்ளது
அத்துடன் மீகொட பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் நபர் இன்று உயிரிழந்தார். இவருக்கு நிமோனியா இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.