கொரோனாவிற்கு தடுப்பூசி வெற்றியின் விளிம்பில் உலகம்

கொரோனா நோய்க்கான தடுப்பூசி 90 சதவீத வெற்றி அளித்துள்ளதாக பிப்சர் மற்றும் பயோஎன்டெக் என்பன அறிவித்துள்ளன.


மேலும் தமது அறிக்கையில் மூன்றாம் கட்ட சோதனையில் 43,538 தன்னார்வலர்களிடம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதில் 90 சதவீத வெற்றியை பெற்றது ஒரு மைல்கல் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு முழுமையான அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கிறது.மேலும் பலருக்கு சோதனை செய்வதாகவும் குறிப்பிடும் அந்நிறுவனம் ஜெர்மனியை தளமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 அவசர பயன்பாட்டிற்காக அனுமதி பெறும் வகையில் உணவு மற்றும் ஔடதங்கள் அதிகார சபையின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.