எட்டு மணிநேர தீவிர விசாரணையில் மைத்திரி - நாளையும் தொடரும்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்றையதினம் எட்டு மணிநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை நடத்தியது.

 அத்துடன் நாளையதினமும் அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


 இன்று முற்பகல் 9:45 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேனவிடம் எட்டு மணிநேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


 முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக பல்வேறு தடவைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது