Wednesday, November 4, 2020

தல அஜித்தின் 'வலிமை' திரைப்பட படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை.கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது.



எஞ்சியுள்ள படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜீத் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு சென்றுள்ளார்.

தனது ஹோட்டல் அரங்கில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் மோட்டார் சைக்கிள் சேசிங் காட்சிகளும் நிறைந்திருக்கும் என தெரிய வந்திருக்கும் நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.


திரைப்படத்தின் கதாநாயகி யார் வில்லன் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதையும் இப்படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!